முதல் பாதி 2D, இரண்டாம் பாதி 3D: பிரபல நடிகரின் வளர்ந்து வரும் படம்

  • IndiaGlitz, [Monday,February 12 2018]

தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர் நடித்த 'நாடோடி மன்னன் திரைப்படம் முதல் பாதி கருப்பு வெள்ளையாகவும், இரண்டாம் பாதி வண்ணப்படமாகவும் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் ஜி.வி.பிரகாஷ் நடித்த படம் ஒன்று முதல் பாதி 2D ஆகவும், இரண்டாம் பாதி 3D தொழில்நுட்பத்திலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்திற்கு பின்னர் இயக்குனர் ஆதிக் மற்றும் ஜி.வி.பிரகாஷ் மீண்டும் இணைந்த படம் ஒன்று வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படத்தின் இரண்டாம் பாதி கதைக்கு கண்டிப்பாக 3D தொழில்நுட்பம் தேவைப்படுவதால் முழுக்க முழுக்க இரண்டாம் பாதி 3D தொழில்நுட்பத்தில் படமாக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். எனவே முதல் பாதி 2Dயிலும், இரண்டாம் பாதி 3Dயிலும் வெளிவரும் முதல்படமாக அனேகமாக இதுவாகத்தான் இருக்கும் என்று கருதப்படுகிறது.

More News

கமல்ஹாசன் கையில் ஆயுதத்தை கொடுத்த பிரபல நடிகை

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலையில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து ஆற்றிய உரை, உலகெங்கும் உள்ள தமிழர்களை நிமிரச்செய்துள்ளது.

ஏலத்துக்கு வருகிறது ரஜினி-கமல் பட தயாரிப்பு நிறுவனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, முத்து, உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் உள்பட ஏராளமான வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் கவிதாலயா நிறுவனம்.

கேங்ஸ்டர் வேடத்தில் குருசோமசுந்தரம் நடித்த படம்

பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ்பீதா என்பவ்ர் 'வஞ்சகர் உலகம்' என்ற த்ரில் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

அமலாபால் பாலியல் தொல்லை விவகாரத்தில் திடீர் திருப்பம்

அமலாபால் அவர்களிடம் சென்னை தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாக பேசியதாக சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்தது.

ஹார்வர்டு பல்கலையில் கமல் பேசியதன் முழு தொகுப்பு

நடிகர் கமல்ஹாசன் நேற்று ஹார்வர்டு பல்கலையில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து பேசிய உரை பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் பேசியதன் முழு தொகுப்பு தற்போது வெளியாகியுள்ளது.