ரசிகர்களை எதிர்பார்க்க வைத்த ஜிவி பிரகாஷின் அதிரடி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2006ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கிய ’வெயில்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், அதன் பின்னர் கடந்த 13 ஆண்டுகளில் விஜய், சூர்யா, தனுஷ், விஷால், ஆர்யா, கார்த்தி உள்பட பல முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்
இந்த நிலையில் தற்போது அவர் சூர்யாவின் சூரரைப்போற்று’ மற்றும் ஏஎல் விஜய் இயக்கி வரும் ’தலைவி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் ஜீவி பிரகாஷ்குமார் இசை அமைக்கும் 75வது படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 4மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிவி75 என்று கூறப்படும் இந்த படம் ஒரு ஆச்சரியமான பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என்றும் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அனேகமாக சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் அறிவிப்பு தான் இன்று மாலை 4 மணிக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#GV75 announcement today at 4 pm ... with a big special project .. ???? keep guessing
— G.V.Prakash Kumar (@gvprakash) January 2, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com