பத்திரிகையாளர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் எழுதிய நன்றி கடிதம்

  • IndiaGlitz, [Wednesday,December 28 2016]
கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர் என இரட்டை குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடித்த 'புரூஸ்லீ' வரும் பொங்கல் தினத்தில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் சற்று முன்னர் ஜி.வி.பிரகாஷ் தனக்கு பேராதரவு கொடுத்து வரும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
நான் இசையமைப்பாளராகவும், பின்பு நடிகனாகவும் அறிமுகமான நாள் முதல் எனது இசையிலும் நடிப்பிலும் வெளியான படங்களுக்கு இன்று வரை ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இசையமைப்பாளராக எனக்கு பேராதரவு அளித்த வந்த நீங்கள் நான் நடிகனாக மாற புதிய முயற்சி மேற்கொண்டதற்கு நீங்கள் அளித்த ஆக்கமும் ஊக்கமும் என்றென்றும் எனக்கு ஊன்று கோளாய் இருந்து வந்துள்ளது.
தற்போது கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் 'புரூஸ் லீ' பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதை தொடரந்து ஸ்ரீ க்ரீன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் 'அடங்காதே', 'திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பக்கர் இயக்கத்தில் '4G', பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் படம், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சசி இயக்கத்தில் உருவாகும் படம், இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் உருவாகும் படம், ரவி அரசு இயக்கத்தில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறேன்.
எனது இசைக்கும் நடிப்பாற்றலுக்கும் தாங்கள் அளித்து வரும் எல்லையற்ற அன்பிற்கும் ஆதரவிற்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்
இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.,