ஜி.வி.பிரகாஷின் 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தின் தமிழக வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,November 21 2016]

பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் இளம் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த வெள்ளியன்று பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த 'கடவுள் இருக்குறான் குமாரு' படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் திருப்திகரமான வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
இந்த படம் தமிழகத்தில் கடந்த வார இறுதியில் சுமார் ரூ.6.5 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் சென்னையில் இந்த படம் சுமார் ரூ.80 லட்சமும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ரூ.1.5 கோடியும் வசூல் செய்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்திற்கு பின்னர் அதிகவசூல் தந்துள்ள படமாக இந்த படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளது.