மருத்துவ கல்லூரி மாணவிக்கு ஜி.வி.பிரகாஷின் மகத்தான உதவி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் எந்த ஒரு சமூக பிரச்சனைகளுக்கும் திரையுலகில் இருந்து குரல் கொடுக்கும் முதல் நபராக இருந்து வருகிறார். ஜல்லிக்கட்டு முதல் அனிதா பிரச்சனை வரை முதன்முதலில் குரல் கொடுப்பதோடு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார்
திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி சுகன்யா. ரூ.42 லட்சம் செலவு செய்து படித்து வரும் நிலையில் சமீபத்தில் இவருடைய தந்தை திடீரென மரணம் அடைந்துவிட்டார். இந்த நிலையில் மூன்றாம் ஆண்டு கல்விக்கட்டணத்தை கட்ட முடியாததால் சமீபத்தில் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்
இந்த விஷயம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் கல்லூரி நிர்வாகம் சுகன்யாவை மீண்டும் கல்லூரியில் சேர்த்து கொண்டது. இந்த நிலையில் மாணவி சுகன்யா வீட்டிற்கு நேரில் சென்று சுகன்யாவை சந்தித்த ஜி.வி.பிரகாஷ், 'மாணவி சுகன்யாவின் மருத்துவ படிப்புக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் உள்பட அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.வி.பிரகாஷ், 'மாணவி சுகன்யாவுக்கு நான் செய்யும் உதவி ஒரு பெரிய விஷயமே இல்லை. இது எங்களுடைய கடமை. ஆனால் மருத்துவம் படித்து முடித்த பின்னர் சுகன்யா ஏழை எளியவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்' என்று கூறினார். ஜி.வி.பிரகாஷின் இந்த மகத்தான உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments