புரூஸ்லீ படத்தின் முக்கிய பணியை தொடங்கினார் ஜி.வி.பிரகாஷ்

  • IndiaGlitz, [Saturday,June 04 2016]

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு படமான 'புரூஸ்லீ' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை தற்போது ஜி.வி.பிரகாஷ் தொடங்கியுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் ஜி.வி.பிரகாஷ் தனது டப்பிங் பணியை முடித்தவுடன் மற்ற நடிகர், நடிகைகள் டப்பிங் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷ், க்ரிதி கார்பனந்தா, ராஜேந்திரன், பாலசரவணன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.