close
Choose your channels

'தெறி' டீசரில் உள்ள காட்சிகள். ரகசியத்தை உடைத்த ஜி.வி.பிரகாஷ்

Sunday, January 31, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடிப்பில் 'ராஜா ராணி' இயக்குனர் அட்லி இயக்கியுள்ள 'தெறி' படத்தின் டீசர் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இந்த டீசரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் குறித்த தகவல்களை இந்த படத்தின் இசையம்மைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
பொதுவாக விஜய்யின் படங்களில் அறிமுக காட்சி அல்லது அறிமுக பாடல் அட்டகாசமாக அமைவது வழக்கம். இந்நிலையில் 'தெறி' படத்தின் விஜய்யின் அறிமுகப்பாடலான 'ஜித்து ஜில்லாடி' பாடலில் இடம்பெற்றுள்ள ஒருசில காட்சிகள் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாகவுள்ள டீசரில் இடம்பெற்றிருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். விஜய்யின் அறிமுகப்பாடல் காட்சிகளை படம் வெளிவரும் முன்பே டீசரில் வெளியாகவுள்ளதாக வந்த தகவல் விஜய் ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


டீசரை அடுத்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.விஜய், எமிஜாக்சன், சமந்தா, மொட்டை ராஜேந்திரன், ராதிகா, இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment