இதுவே இந்தியாவின் கடைசி தற்கொலையாக இருக்க வேண்டும்: ஜி.வி.பிரகாஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்காத அரியலூர் அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் துன்பக்கடலில் மூழ்கடித்த நிலையில் நேற்று இரவே இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அரியலூர் சென்று அனிதாவுக்கு இறுதியஞ்சலி செலுத்தினார். பின்னர் இதுகுறித்து அவர் ஒரு வீடியோவை தனது சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
டாக்டர் அனிதா, 1176 மார்க், கட் ஆப் 196.5. நான் அவருடைய வீட்டிற்கு சென்றிருந்தேன். என்னை வாங்க என்று அழைப்பதற்கு அந்த தங்கை உயிருடன் இல்லை. நீதி கிடைக்கும் என்று நம்பிய அந்த மாணவிக்கு கடைசி வரை நீதி கிடைக்கவில்லை. இனிமேலும் அனிதா போன்ற சகோதர சகோதரிகளுக்கு நீதி கிடைக்குமா? என்று எனக்கு தெரியவில்லை. ஒரு ஏழை மாணவி ஒரு டாக்டராகவோ அல்லது நல்ல வேலையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது தவறா? அந்த படிப்பை அனிதா தவம் மாதிரி படித்து நல்ல மார்க் வாங்கியுள்ளார்கள்
இவ்வளவு நல்ல மார்க் வாங்கிய அனிதாவுக்கு நீட் தேர்விலும் நல்ல மார்க் வாங்குவது ஒரு பெரிய விஷயமே இல்லை. அதற்கான பயிற்சியும் நேரமும் கொடுத்திருந்தால் அவர் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்பார். கல்வி சிஸ்டம் வரைமுறை இல்லாமல் உள்ளது. ஸ்டேட் போர்டில் படித்த ஒரு மாணவி சென்ட்ரல் போர்டின் கேள்விகளுக்கு பதிலெழுத தவறுவதற்கு காரணம் நம்முடைய கல்வி சிஸ்டம் சரியில்லை. நாம் தான் அந்த சிஸ்டத்தை வரைமுறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற ஒரு தற்கொலை இந்தியாவில் கடைசியாக இருக்க வேண்டும். இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தனது வீடியோ செய்தியில் கூறியுள்ளார்.
— G.V.Prakash Kumar (@gvprakash) September 1, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com