ஒவ்வொண்ணும் உட்கார்ந்திருக்குய்யா.. ஜிவி பிரகாஷ்-க்கு பாராட்டு தெரிவித்த வைரமுத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த மெட்டு ஒன்றை பாராட்டி வைரமுத்து கூறிய வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் ’கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்ற படத்திற்காக பாடல் எழுதும் காட்சியின் வீடியோவை வைரமுத்து பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த மெட்டுக்கு சரியான பொருத்தமான வார்த்தைகளை கவியரசு வைரமுத்து பதிவு செய்து வரும் காட்சிகள் உள்ளன. மேலும், ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த மெட்டுக்கும், தங்கர்பச்சான் கூறிய காட்சிக்கும் இந்த பாடல் வரிகள் பொருத்தமாக இருக்கும் என்றும் ஒவ்வொன்றும் உக்காந்து இருக்குதய்யா என்று அவர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இது குறித்த வீடியோவை பதிவு செய்த வைரமுத்து அதில் கூறியிருப்பதாவது:
கருமேகங்கள்
ஏன் கலைகின்றன
படத்துக்குப் பாட்டமைக்கக்
கலைமேகங்கள் கூடிய தருணம்
தங்கர் பச்சான், ஜி.வி.பிரகாஷ்,
மற்றும் நான்
மெட்டுக்குப் பாட்டெழுதினேன்
அதில் சில காட்சிகள்
உங்கள் கண்களுக்கும்
காதுகளுக்கும்
வைரமுத்துவின் இந்த பதிவுக்கு பாராட்டு தெரிவித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
மெட்டுக்கு பாட்டா?
பாட்டுக்கு மெட்டா? எனில்
பாட்டுக்கு மெட்டமைத்தது போன்ற உணர்வை தருவதில் தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களின் திறன் அறிவேன்.
அதில் கவிஞர் வைரமுத்து
அவர்கள் தனிச்சிறப்பு
மெட்டு கெட்டுப்போகாமல் தாங்கி பிடிக்கும் இசையப்பாளர்களில் திரு
ஜிவி பிரகாஷ்
தனிரகம்
வாழ்த்துக்கள்
மெட்டுக்கு பாட்டா?
— Dr.Seenu Ramasamy (@seenuramasamy) September 1, 2022
பாட்டுக்கு மெட்டா? எனில்
பாட்டுக்கு மெட்டமைத்தது போன்ற உணர்வை தருவதில் தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களின் திறன் அறிவேன்.
அதில் கவிஞர் @Vairamuthu
அவர்கள் தனிச்சிறப்பு
மெட்டு கெட்டுப்போகாமல் தாங்கி பிடிக்கும் இசையப்பாளர்களில் திரு @gvprakash தனிரகம்
வாழ்த்துக்கள் https://t.co/31eozPiQjr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments