அசுரன் படத்தின் முக்கிய அப்டேட்டை அளித்த ஜிவி பிரகாஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்வதில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பிசியாக உள்ளார்
இந்த படத்தின் பாடல்கள் குறித்து ஏற்கனவே ஒருசில அப்டேட்டுக்களை தெரிவித்துள்ள ஜிவி பிரகாஷ் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் அடுத்த பாடல் கம்போஸிங் குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளார். இந்த வாரம் 'அசுரன்' படத்தின் அடுத்த பாடலை கம்போஸ் செய்யவிருப்பதாகவும், இந்த பாடலை ஏகாதேசி எழுதியுள்ளதாகவும், இந்த பாடலை பாடும் நபர் குறித்த ஆச்சரிய அறிவிப்பை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை தனுஷ், கென், டிஜே ஆகியோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.
#asuran song recording this week ... written by Egadesi ... will reveal the singer in a week ... exciting folk number Onway @dhanushkraja @VetriMaaran @theVcreations
— G.V.Prakash Kumar (@gvprakash) July 11, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com