'ஆயிரத்தில் ஒருவன் 2' படம் குறித்த சூப்பர் அப்டேட்.. ஜிவி பிரகாஷ் சொன்னது என்ன?

  • IndiaGlitz, [Tuesday,May 23 2023]

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா நடிப்பில் உருவான ’ஆயிரத்தில் ஒருவன்’ என்ற திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது.

செல்வராகவன் பல பேட்டிகளில் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் குறித்து கூறியிருந்தார் என்பதும் ரசிகர்கள் அவ்வப்போது அவரிடம் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்றும் இது ரொம்ப பெரிய பட்ஜெட் படம் என்றும் அது நடந்தால் நானும் மிகவும் சந்தோஷப்படுவேன் என்றும் தெரிவித்தார். மேலும் செல்வராகவனிடம் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் கதையைக் கேட்க நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஆயிரத்து ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் சோழர்களின் புகழை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரப்பிய நிலையில் அதே சோழர்களின் கதையை வித்தியாசமாக சொன்ன படம் தான் ’ஆயிரத்தில் ஒருவன்’ என்பதும் அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாவது மிகச் சரியான காலம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

சரத்பாபு முன் எப்போதும் இதை செய்ய மாட்டேன்.. அஞ்சலி செலுத்திய பின் ரஜினிகாந்த் பேட்டி..!

பழம்பெரும் நடிகர் சரத்பாபு நேற்று காலமான நிலையில் அவரது உடல் இன்று சென்னைக்கு எடுத்துவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சரத்பாபு உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி

அனிருத் அட்டகாசமாக கம்போஸ் செய்த 'இந்தியன் 2' பாடல்.. வைரல் வீடியோ..!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில்

ஜப்பான் ஒசாகா விருது… சிறந்த நடிகர் விஜய், விஜய்சேதுபதி என விருது பெறும் முக்கிய பிரபலங்கள்!

ஜப்பான் நாட்டில் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘ஒசாகா சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு அதில் சிறந்த நடிகர்,

'விடாமுயற்சி' படப்பிடிப்பு எப்போது? அஜித் ரசிகர்களுக்கு செம்ம குஷியான தகவல்..!

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு 'விடாமுயற்சி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாகவும் லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில்

'ஆர்.ஆர்.ஆர்' நடிகர் காலமானார்.. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இரங்கல்...!

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவர் திடீரென காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்