'அசுரன்' படத்தின் அட்டகாசமான அப்டேட் அளித்த ஜிவி பிரகாஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்த பணிகளை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் செய்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் 'அசுரன்' படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட் விரைவில் அளிப்பதாக ஜிவி பிரகாஷ் கூறியிருந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு அட்டகாசமான அப்டேட்டை அளித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும், அவருடன் கென், டிஜே உள்ளிட்டோர்களும் இந்த பாடலை பாடியுள்ளதாகவும் இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாடல் சிங்கிள் டிராக்காக விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கும் அசுரன்' படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#asuransongupdate #asuran @dhanushkraja ,ken , tee jay sing a song together in yugabarathis lyrics ... a peppy trk on way for @VetriMaaran @theVcreations ?????? pic.twitter.com/wSVycMqCZf
— G.V.Prakash Kumar (@gvprakash) June 24, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments