'அசுரன்' படத்தின் அட்டகாசமான அப்டேட் அளித்த ஜிவி பிரகாஷ்

  • IndiaGlitz, [Monday,June 24 2019]

தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்த பணிகளை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் செய்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் 'அசுரன்' படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட் விரைவில் அளிப்பதாக ஜிவி பிரகாஷ் கூறியிருந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு அட்டகாசமான அப்டேட்டை அளித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும், அவருடன் கென், டிஜே உள்ளிட்டோர்களும் இந்த பாடலை பாடியுள்ளதாகவும் இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாடல் சிங்கிள் டிராக்காக விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கும் அசுரன்' படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

கீர்த்தி சுரேஷின் அடுத்த பட டைட்டிலை அறிவித்த பிசி ஸ்ரீராம்!

கடந்த ஆண்டு நடிகையர் திலகம்', 'தானா சேர்ந்த கூட்டம்', 'சீமராஜா', 'சர்கார்', 'சாமி2', சண்டக்கோழி 2' போன்ற படங்களில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது போனிகபூர் தயாரிப்பில் ஒரு இந்தி படத்தில்

பேச்சுரிமை என்றாலும் அதற்கும் வரம்பில்லையா? ரஞ்சித்துக்கு நீதிபதி கேள்வி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ரஞ்சித், 'ராஜராஜ சோழன்'

கைதட்டியது தவறா? முதல்நாளில் மோதிக்கொண்ட சேரன் - பாத்திமா பாபு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பிரச்சனையின்றி, கருத்துவேறுபாடின்றி செல்லும் வரை சுவாரஸ்யம் இருக்காது. எப்போது மோதல் தொடங்குகிறதோ

இந்த முறை பிக்பாஸ் ஈழத்தமிழர்களுக்காகவா?

பிக்பாஸ் 1 நிகழ்ச்சி மக்களை கவர்ந்த அளவுக்கு பிக்பாஸ் 2 மக்களை திருப்திபடுத்தவில்லை என்று கூறப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் பாசிட்டிவ் எனர்ஜியை தந்த ஓவியா

யானை சிலைக்கு அடியில் மாட்டிக்கொண்ட பெண்: வைரல் வீடியோ

கேமிரா செல்போன் அறிமுகமான நாளில் இருந்து செல்பி என்ற வியாதி பலரிடம் தொற்றிக்கொண்டது. விளையாட்டாக எடுக்கும் செல்பிகள் சிலசமயம் விபரீதமாக