சூர்யாவின் 'சூரரை போற்று' புதிய அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்!

  • IndiaGlitz, [Saturday,January 18 2020]

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிவரும் ’சூரரை போற்று’படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ’சூரரை போற்று’படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அடுத்த அப்டேட்டை வழங்கியுள்ளார்.

இந்த படத்தில் ஏற்கனவே ’மாறா தீம்’ என்ற தீம் மியூசிக் பாடல் இருப்பதாக ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டிருந்த நிலையில் இந்த பாடலின் மிக்ஸிங் பணி தற்போது தயாராகி வருவதாகவும் மிக விரைவில் இந்த தீம் பாடல் சிங்கிள் பாடலாக ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சூரியாவின் குரலில் தெருக்குரல் அறிவு பாடல் வரிகளில் உருவாக்கி இருக்கும் பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர்.

More News

த்ரிஷா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலில் '96' கனெக்சன்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் நடிகை த்ரிஷா நடித்த '96' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது இந்த படத்தில் இடம்பெற்ற ராம் மற்றும் ஜானு கேரக்டரை படம் பார்த்த யாராலும்

அடிமுறை'க்காக சினேகா செய்த அர்ப்பணிப்பு

தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகிய 'பட்டாஸ் திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

உதயநிதியுடன் நேருக்கு நேர் மோதும் வைபவ்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சைக்கோ' திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதே தேதியில் வைபவ் நடித்துள்ள

தனுஷின் 'கர்ணன்' படத்தில் இணைந்த இளம் நடிகை!

தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது 'பரியேறும் பெருமாள்'

நிர்பயா  வழக்கு - பாலியல் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்குத் தண்டனை

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒடுகின்ற பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, இறந்த மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்திருந்தது