இவர்களை வெளியில் நடமாடவிடுவது பேராபத்து: ஜிவி பிரகாஷ்
- IndiaGlitz, [Monday,March 11 2019]
தமிழகத்தையே அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியுள்ள திருநாவுக்கரசு உட்பட 5 பேரை போலீசார் சிறையில் அடைத்துள்ள இந்த வழக்கில் கைதான அனைவருக்கும் ஒருசில நாட்களில் ஜாமீன் கிடைத்துள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது... இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து.. இவர்களுக்கு ஜாமீன் வழங்கியதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்' என்று நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.
I strongly condemn these monsters ... மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது... இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து..#arrestpollachirapists #arrestpollachirapists pic.twitter.com/eMCl6sP9W1
— G.V.Prakash Kumar (@gvprakash) March 11, 2019