உரிமைக்களுக்காக போராடுவதும் ஜனநாயகம்தான்: பிரபல தமிழ் ஹீரோ
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் வடமாநில விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உள்நாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பிரபலங்களும் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் தமிழ் திரையுலகை சேர்ந்த மாஸ் நடிகர்கள் யாரும் இதுவரை விவசாயிகள் போராட்டம் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காத நிலையில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் சற்றுமுன்னர் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் அவர் இதுகுறித்து கூறியதாவது:
மக்களுக்கு போராடுவதற்கான உரிமை உள்ளது; மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை; விவசாயிகளிடம் வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொள்ள சொல்வது தற்கொலைக்கு சமம்; அவர்கள் உரிமைக்களுக்காக போராடுவதும் ஜனநாயகம்தான்! அவர்கள் “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்... என்று பதிவு செய்துள்ளார்.
people have the right to protest.
— G.V.Prakash Kumar (@gvprakash) February 5, 2021
Government should protect the interest of the people,
Forcing farmers to accept the new laws is suicide.
People
Protesting for their rights and is democracy. அவர்கள் “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com