அதிகாரிகளின் முடிவு மிருகத்தனமானது: ஜிவி பிரகாஷ் கருத்து
- IndiaGlitz, [Saturday,February 02 2019]
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இடம்பெற்ற ஊருக்குள் புகுந்த காட்டு யானையான சின்னத்தம்பியை கடந்த 25-ந்தேதி லாரியில் ஏற்றி பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை வரகளியாறு வனப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் விட்டனர். ஆனால் ஊருக்குள் புகுந்து கருப்பு, பழங்களை சாப்பிட்டு பழக்கப்பட்ட சின்னத்தம்பி மீண்டும் ஊருக்குள் திரும்பிவிட்டது.
சின்னத்தம்பி மீண்டும் ஊருக்குள் நுழைந்ததை அறிந்த வனத்துறையினர் யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தொடர்ந்து வனத்துறையினர் விரட்டியதால் உணவு, தண்ணீர் இன்றி ஓடிக்கொண்டிருந்த சின்னத்தம்பி திடீரென மயங்கி கீழே விழுந்தது. மயக்கம் தெளிந்ததும் காட்டுக்குள் சின்னத்தம்பியை விரட்ட அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
மேலும் சின்னதம்பி யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று வசிக்க வாய்ப்பு இல்லை என்றும், சின்னத்தம்பி எந்த பொருட்களையும் உடைத்து நாசம் செய்யாமல் சாதுவாக மாறிவிட்டதால் முகாம்களில் பாதுகாக்கப்பட்டு பின்னர் அதை கும்கியாக மாற்றுவதே சிறந்தது என்றும் வன நல ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
இந்த கருத்துக்கு நடிகர் ஜிவி பிரகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கூறியபோது, 'வாழும் உரிமை அந்த யானைக்கும் உள்ளது, தன் சகோதரனை பிரிந்த சோகத்தில் அலைந்து கொண்டிருக்கும் யானையை மேலும் துன்புறுத்துவது போல் அதை கும்கியாகிவோம் என்று அதிகாரிகள் எடுத்திருக்கும் முடிவு மிருகத்தனமானது, இரு யானைகளை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும்.