தமிழக அரசுக்கு ஜி.வி.பிரகாஷ் நன்றி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹார்வர்டு பல்கலையில் தமிழ் மொழிக்கு இருக்கை கிடைப்பது தமிழக அரசின் முயற்சியால் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதை அடுத்து இந்த இருக்கைக்காக கடந்த சில மாதங்களாக முயற்சிகளில் ஈடுபடும் ஒருவராகிய ஜி.வி.பிரகாஷ் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில், 'ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக நிதி ஒதுக்கியுள்ள தமிழக முதல்வர் மற்றும் திரு மாஃபா பாண்டியராஜ் அவர்களுக்கும் தமிழினத்தின் சார்பாக நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹார்வர்டு பல்கலையில் இருக்கை பெற நிதியுதவி பெறும் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜி.வி.பிரகாஷ் ஒரு குறிப்பிட்ட தொகையை தனது பங்காக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்களை ஜி.வி.பிரகாஷ் நேரில் சந்தித்து, செம்மொழியான தமிழ் மொழிக்கு ஹார்வர்டு பல்கலையில் இருக்கை பெற உதவி செய்யுமாறு அவரிடம் கோரிக்கை வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout