இதுவரை நான் இதை செய்ததே இல்லை.. 'தங்கலான்' பாடல் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
இதுவரை இல்லாத அளவில் சர்வதேச தரத்தில் ‘தங்கலான்’ படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.
பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
‘தங்கலான்’ ஆடியோ குறித்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இரண்டு பாடல்களை ஒலிப்பதிவு செய்து முடித்து விட்டேன். இதுவரை நான் முயற்சி செய்யாத தனித்துவமான ஒரு சர்வதேச தரத்தில் பாடல்களை உருவாக்கி உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து இந்த படத்தின் பாடல்கள் இதுவரை இல்லாத அளவில் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம், பார்வதிமேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றன.
Super excited about the way #thangalaan audio is coming . Finished Recording two songs.Come out with an international tribal mix of audio which is unique for me I haven’t tried it before .Super excited @beemji @chiyaan @StudioGreen2 @officialneelam @parvatweets @jungleemusicSTH
— G.V.Prakash Kumar (@gvprakash) January 27, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments