'சூரரை போற்று ஹிந்தி: சூப்பர் அப்டேட்டை கொடுத்த ஜிவி பிரகாஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனாலும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ படத்தின் இந்தி ரீமேக் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் சூர்யா கேரக்டரில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி இந்த படத்தில் சூர்யா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாகவும் தமிழில் இயக்கிய சுதா கொங்கரா ஹிந்தியிலும் இயக்கி வருகிறார் என்பதும் தமிழில் இசை அமைத்த ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் ’சூரரைப்போற்று’ படத்தின் ஹிந்தி பாடல்கள் ரெக்கார்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் இந்தப் படத்தின் பாடல்கள் பிரத்யேகமாக ஒலிப்பதிவு உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த பாடல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த படம் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் என 5 தேசிய விருதுகளை பெற்ற ’சூரரைப்போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக் வட இந்திய ரசிகர்களால் வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#SooraraiPottru Hindi songs recording on progress … coming up with fresh songs for it … super excited @Sudha_Kongara @akshaykumar @Suriya_offl @Abundantia_Ent @rajsekarpandian pic.twitter.com/7sZf4vUBIt
— G.V.Prakash Kumar (@gvprakash) December 27, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments