'அசுரன்' படத்தின் அடுத்த அப்டேட்டை அறிவித்த ஜிவி பிரகாஷ்!

  • IndiaGlitz, [Sunday,August 11 2019]

தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஒரே நேரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 4 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதால் குறிப்பிட்ட தேதிக்குள் படத்தின் பணிகளை முடிக்க படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் பின்னணி இசையை தொடங்கிவிட்டதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இதனையடுத்து பின்னணி இசை தெறிக்க வேண்டும் என்று தனுஷின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, சுப்பிரமணியன் சிவா, பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' என்ற நாவலை தழுவி தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'சிக்ஸர்' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு

நடிகர் வைபவ் நடித்துள்ள 'சிக்ஸர்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

அமித்ஷாவுக்கு ரஜினி வாழ்த்து: காஷ்மீர் விவகாரத்திற்கு பாராட்டு!

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இன்று சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர்

சாக்சியை மறந்த கவின், முகினை மறந்த அபிராமி: பிக்பாஸ் வீட்டில் பிரளயமா?

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் டாப் 3 இடங்களை பெறுபவர் யார் என்பது குறித்த கமல்ஹாசனின் கேள்விக்கு கவின் பதிலளிக்கையில்

தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது. காஷ்மிர் விவகாரம் குறித்து பிரபல நடிகை

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த 370வது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் , லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படவுள்ளது.

அத்திவரதர் அருளால் சிம்பு திருமணம்: டி.ராஜேந்தர் பேட்டி

கடந்த ஒன்றரை மாதங்களாக காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதியில் இருந்து