'அசுரன்' படத்தின் அடுத்த அப்டேட்டை அறிவித்த ஜிவி பிரகாஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஒரே நேரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 4 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதால் குறிப்பிட்ட தேதிக்குள் படத்தின் பணிகளை முடிக்க படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் பின்னணி இசையை தொடங்கிவிட்டதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இதனையடுத்து பின்னணி இசை தெறிக்க வேண்டும் என்று தனுஷின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, சுப்பிரமணியன் சிவா, பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' என்ற நாவலை தழுவி தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Started the #BGScore #rerecording for #asuran ... ?????? releasing October 4th ... @dhanushkraja @VetriMaaran @theVcreations
— G.V.Prakash Kumar (@gvprakash) August 11, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com