வெற்றிமாறன் படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளரின் தங்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழில் பல டாப் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் பெரியடப்படாத படம் ஒன்றில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் சூரிக்கு வில்லனாக பிரபல இயக்குநர் பாரதிராஜா நடிக்க இருந்தார். ஆனால் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. அங்கு குளிர் அதிகமாக இருக்கும் என்பதால் அந்தப் படத்தில் இருந்து பாரதிராஜா விலகினார்.
அதையடுத்து இயக்குநர் பாரதிராஜா நடிக்க இருந்த வில்லன் கேரக்டரில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. தமிழில் முன்னணி கதாநாயகனாக இருந்து வரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க காரணம் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அதன் கதைக்காக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும் கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
பவானி ஸ்ரீ ஏற்கனவே பாவக்கதைகள் ஆந்தாலஜி படத்தில் வந்த தங்கம் குறும்படத்தில் நடித்து கவனம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அதோடு க/பெ ரணசிங்கம் படத்திலும் விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்து இருந்தார். மேலும் “நண்பன் ஒருவன் வந்த பின்பு“ என்ற புதிய படத்திலும் கதாநாயகியாக நடிக்க இவர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்நிலையில் பிரபல இயக்குநர் ஒருவரின் படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments