ஜிவி பிரகாஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,August 28 2019]

ஜிவி பிரகாஷ் இசையில் தனுஷ் நடிப்பில் உருவான 'அசுரன்' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்த படம் ஒன்றின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குநர் சசி இயக்கிய திரைப்படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்து சென்சார் சான்றிதழும் பெற்று ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இதே செப்டம்பர் 6ஆம் தேதி தான் தனுஷ் நடித்த 'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த், ஜிவி பிரகாஷ், லிஜோமால் ஜோஸ், காஷ்மீரா பர்தேஷி, தீபா ராமானுஜம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். பிரசன்னகுமார் ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

ஜக்கி வாசுதேவ் உடன் நடிகை த்ரிஷா சந்திப்பு!

பிரபல நடிகை த்ரிஷா இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து அஜித் குறித்து பேட்டியளித்து தலைப்பு செய்திகளில் இடம்பெற்றார். மேலும் அந்த பேட்டியில்

அண்ணனுக்கு அறுவை சிகிச்சை: நலம் விசாரிக்க சென்ற ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயண ராவ் அவர்களுக்கு கால் அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் அவரை நலம் விசாரிக்க ரஜினிகாந்த் பெங்களூர் சென்றார். 

பாலிவுட் ரீமேக்கில் இணையும் கவுதம் மேனன் - பிரசாந்த்

பாலிவுட்டில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றதோடு தேசிய விருதையும் பெற்ற 'அந்தாதூன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் பெற்றுள்ளார் என்பதையும்

மலையாள படத்தின் பாடலாசிரியராக மாறிய தனுஷ்!

கோலிவுட் திரையுலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்கள் எடுத்த தனுஷ் தற்போது மலையாள படம் ஒன்றுக்காக பாடல் எழுதி அந்த பாடலை பாடியும் உள்ளார்.

ஏடிஎம்இல் பணம் எடுக்க 6 மணி நேரம் இடைவெளி: வங்கியாளர் குழு பரிந்துரை

போலி ஏடிஎம் கார்டு மூலம் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க 6 முதல் 12 மணிநேரம் இடைவெளியைக் கட்டாயமாக்க டெல்லி வங்கியாளர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.