1000 ரூபாய் கேட்ட ரசிகருக்கு 1500 ரூபாய் அனுப்பிய ஜிவி பிரகாஷ்.. ரசிகரின் ரியாக்சன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷிடம், ரசிகர் ஒருவர் சமூக வலைதளம் மூலம் அவசரமாக 1000 ரூபாய் கடன் கேட்ட நிலையில், ஜி.வி. பிரகாஷ் அந்த ரசிகருக்கு 1500 ரூபாய் அனுப்பி உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருந்து வரும் ஜி.வி. பிரகாஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் ஜி.வி. பிரகாஷின் ட்விட்டர் ஐடியை டேக் செய்து, "தனக்கு மிகவும் அவசரமாக 1000 ரூபாய் தேவைப்படுகிறது.
நீங்கள் கொடுத்து உதவி செய்தால், நாளை திருப்பிக் கொடுத்து விடுவேன்" என்று கூறியிருந்தார். இந்த ட்விட்டை பார்த்த அடுத்த நான்கு நிமிடங்களில், ஜி.வி. பிரகாஷ் அந்த ரசிகருக்கு 1500 ரூபாய் அனுப்பியுள்ளார்.
இதனை அடுத்து, நன்றி கூறிய அந்த ரசிகர் மறுநாளே அந்த பணத்தை திருப்பி அனுப்பி, "அவசர நேரத்தில் உதவி செய்ததற்கு மிகவும் நன்றி. இந்த உதவியை மறக்க மாட்டேன்" என்றும் கூறியுள்ளார். இது குறித்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்த நிலையில், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் செய்த இந்த உதவி குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Good morning my dear @gvprakash anna❤️Yesterday I asked you as I urgently needed 1000 rupees. You responded within 4 min's of my tweet & sent me 1500 rupees.I will never forget this help I said I will give you the money when you come to me. I have sent it, check pannikonga anna🤗 https://t.co/1jpkYtFxVA pic.twitter.com/Td8WXxgjPW
— Ravi (@ravisankarmvd) October 10, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments