தோல்வி இல்லாத லைப் இண்ட்ர்ஸ்ட்டா இருக்காது: நீட் மாணவர்களுக்கு ஜிவி பிரகாஷ் அறிவுரை
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று நீட்தேர்வு அச்சம் காரணமாக ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் மாணவர்களுக்கு தைரியமூட்டும் வகையில் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
வெற்றியோ தோல்வியோ அதை சரி சமமாகப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். தோல்வி இல்லாத வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்காது. வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு வருவதற்கு தோல்வி மிகவும் அவசியம். இந்த ஒரு தேர்வில் தோல்வி அடைந்தால் வாழ்க்கையில் தோல்வி அடைந்ததாக அர்த்தம் இல்லை. வாழ்க்கை மிகவும் பெரியது. தற்கொலை என்பது எதற்குமே தீர்வு அல்ல.
நீட் தேர்வு காரணமாக ஏற்கனவே பல குழந்தைகள் உயிரிழந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மூன்று உயிர்கள் மரணம் அடைந்ததைவிட கொடுமையான காரியம் வேறு எதுவும் இருக்க முடியாது. 'I am very tired' என லெட்டர் எழுதி வைத்துவிட்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டு இருப்பதற்கு இந்த சமூகமே காரணம்.
முதலில் பெற்றோர்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள். தோல்வி அடைந்தால் தட்டிக் கொடுங்கள். நீங்கள் தான் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒரு தேர்வு உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்காது. எனவே குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். தேர்வில் தோல்வியடைந்தால் பரவாயில்லை. ஆனால் உயிர் போய்விட்டால் திரும்ப வராது. எதையும் எதிர் நோக்க கற்றுக்கொள்ளுங்கள். வெற்றியோ தோல்வியோ எதையும் சமமாகப் பார்க்க குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்’ என்று ஜிவி பிரகாஷ் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
வெற்றியோ தோல்வியோ அத சரி சமமா பார்க்க கத்துக்கோங்க. தோல்வி இல்லாத லைப் இண்ட்ர்ஸ்ட்டா இருக்காது. வாழ்க்கையில பெரிய இடத்துக்கு வரதுக்கு தோல்வி ரொம்ப முக்கியம். இந்த ஒரு பரிட்சைல தோத்தா, வாழ்க்கையில தோத்ததா அர்த்தம் இல்ல. வாழ்க்கை ரொம்ப பெருசு.
— G.V.Prakash Kumar (@gvprakash) September 13, 2020
தற்கொலை எதுக்குமே முடிவு கிடையாது. pic.twitter.com/z69JEdNQ4x
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments