விக்ரம்-பா ரஞ்சித் படம் குறித்த மாஸ் தகவலை கூறிய ஜிவி பிரகாஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடித்த ’கோப்ரா’ மற்றும் ’பொன்னியின் செல்வன்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த நிலையில் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார் என்பதும் விக்ரமின் 61 வது படமான இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் மாஸ் தகவலை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். விக்ரம், பா ரஞ்சித் மற்றும் ஸ்டூடியோ கிரீன் ஆகியவர்கள் இணைந்த படத்தின் அப்டேட் மிக விரைவில் வெளியாக உள்ளது என்றும், இது ஒரு வித்தியாசமான கில்லர் ரைட் திரைப்படம் என்றும், இசையைப் பொறுத்தவரை எனக்கு மிகவும் சவாலான காட்சிகள் உள்ளன என்பதால் இந்த படத்தில் பணிபுரிய நான் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜிவி பிரகாஷின் இந்த ட்வீட்டை பார்க்கும்போது இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மேலும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
#chiyaan61 @beemji @StudioGreen2 …. Update very very soon ?????? .. going to be a killer ride … musically a very interesting project to work on….. exciting times ahead ??
— G.V.Prakash Kumar (@gvprakash) October 22, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments