விஜய்-வெற்றிமாறன் படம் குறித்து பிரபலம் கூறிய ஆச்சரிய தகவல்.. விரைவில் அறிவிப்பு வருமா?

  • IndiaGlitz, [Wednesday,August 30 2023]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் தகவல் வெளியானது. இயக்குனர் வெற்றிமாறன் கூட ஒரு சில பேட்டிகளில் இது குறித்து கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் விஜய் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரும் வெவ்வேறு படங்களில் பிசியாக இருப்பதால் இருவரும் இணைவது எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் இது குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறிய போது ’விஜய் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி குறித்து பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இருவருக்கும் பொருத்தமான நேரம் வரவேண்டும். இருவரும் தற்போது பிஸியாக இருப்பதால் இருவருக்கும் சரியான நேரம் கிடைக்கும் போது அந்த படம் நிச்சயம் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் சுதா கொங்காராவும் தளபதி விஜய் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதுவும் ஒரு நாள் நடக்கும் என்று கூறியுள்ளார். ஜிவி பிரகாஷ் கொடுத்த இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து விரைவில் விஜய் - வெற்றிமாறன் திரைப்படம் குறித்த அறிவிப்பு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.