அது இல்லாமல் எப்படி 'வாடிவாசல்': ஜிவி பிரகாஷின் ஆச்சரிய தகவல்

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படமான ’வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது

வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், ஜிவி பிரகாஷின் இசையில் உருவாகவிருக்கும் இந்த படம் கடந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ’வாடிவாசல்’ படம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். ரசிகர் ஒருவர் ’வாடிவாசல்’ திரைப்படத்தின் அட்டகாசமான ஜல்லிக்கட்டு பின்னணி இசை இருக்குமா? என்று கேட்டபோது ’அது இல்லாமல் எப்படி வாடிவாசல் படம் இருக்கும்? கண்டிப்பாக இருக்கும் என்று ஜிவி பிரகாஷ் கூறினார். மேலும் இந்த திரைப்படம் செம ஸ்கிரிப்ட் என்றும் இந்த படம் மிகப்பெரிய ஒரு அட்டகாசமான ஆக்ஷன் திரைப்படம் என்றும் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்