என்ன பாடல் கொடுத்தாலும் விஜய் ஹிட்டாக்கிவிடுவார்: பிரபல இசையமைப்பாளர்

  • IndiaGlitz, [Saturday,March 07 2020]

தளபதி விஜய் படங்கள் என்றாலே சூப்பர்ஹிட் என்பதும், சூப்பர்ஹிட் என்றால் தளபதி விஜய் படங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் தளபதி விஜய்யின் படங்களில் இருக்கும் ஸ்பெஷல் அவரது படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களுமே ஹிட்டாகும் என்பதுதான்.

அந்தவகையில் தளபதி விஜய் நடித்த ‘தலைவா’ மற்றும் ‘தெறி’ ஆகிய இரண்டு படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் தளபதியுடன் பணியாற்றி அனுபவங்கள் குறித்து கூறினார்

சமீபத்தில் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட ஜிவி பிரகாஷிடம் தளபதி விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறிய போது ’தன்னுடைய மோஸ்ட் பேவரைட் ஹீரோ விஜய்தான் என்றும், ஒரு பாடல் ஒரு கம்போஸர் கொடுத்தால் அது எந்தவகை பாடலாக இருந்தாலும் தன்னுடைய ஸ்க்ரீன் பிரசன்ஸ் மூலம் விஜய் ஹிட்டாக்கி விடுவார் என்றும் கூறினார்.

மேலும் விஜய்யுடன் தான் இரண்டு படங்கள் பணி புரிந்திருப்பதாகவும், இரண்டுமே தனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்றும், தன்னுடைய அதிகபட்ச யூடியூப் பார்வையாளர்களை கொண்ட பாடல்கள் இவைதான் என்றும் ஜீவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்

More News

பலே திருடன்!! மீன்பிடி தூண்டிலை வைத்து நகைக்கடையில் திருட்டு –சிசிடி காட்சியில் பதிவானது

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழி நம் வழக்கில் உண்டு.

துக்ளக் விழாவில் ரஜினி பேசியது குறித்த வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கலந்துகொண்டு பேசியபோது அவர் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக விமர்சனங்கள் எழுந்தன 

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டுகிறது; உலக நாடுகளின் நிலவரம்

“கோவிட் 19” எனப்படும் கொரோனா தற்போது உலகம் முழுவதும் ஒரு லட்சம் மக்களுக்கு பரவியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை சீனாவில் கொரோ

அப்பாவை விட பெரியப்பாவிடம் பாராட்டு வாங்குவது தான் கடினம் ..! ஸ்டாலின் உருக்கம்.

முப்பாலூட்டிய பேராசிரிய பெரியப்பா என தொடங்கும் அந்த பதிவு.. திராவ

க.அன்பழகன் சம்பாதித்தது இரண்டே இரண்டு தான்: ரஜினிகாந்த்

திமுகவின் பொதுச்செயலாளரும் தமிழகத்தின் பழம்பெரும் அரசியல்வாதியுமான க.அன்பழகன் இன்று அதிகாலை 1 மணிக்கு காலமானதை அடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள்