செம படமாக இருக்கும்: அஜித்-சுதா கொங்காரா படம் குறித்து ஜிவி பிரகாஷ்!

அஜித் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் குறித்து தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது கூறியுள்ளார் .

அஜித் மற்றும் சுதா கொங்கரா இணையும் திரைப்படம் விரைவில் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படம் உருவானால் செம படமாக இருக்கும் என்றும் இது ஒரு மிகவும் சுவராசியமான படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கால நேரம் கூடி வரும்போது அஜித் மற்றும் சுதாகரன் மீண்டும் இணைவார்கள் என்றும் அந்த படத்துக்கு நானே இசை அமைப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் பாலா மற்றும் சூர்யா படம் குறித்து ஜிவி பிரகாஷ் கூறியபோது இந்த படத்திற்காக நான்கைந்து பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டேன் என்றும், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அனைத்து பாடல்களையும் கொடுப்பதாக உறுதி அளித்து உள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தை தானே மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More News

 தனுஷ் குடும்பத்தினர்களையே அசர வைத்த ஐஸ்வர்யா ரஜினியின் பதிவு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவு தனுஷின் டும்பத்தினர்களையே அசர வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

தனுஷ் படத்தில் இருந்து விலகிய விவேக் மீண்டும் இணைந்ததாக அறிவிப்பு!

தனுஷ் நடித்த 'மாறன்' படத்திலிருந்து விலகியதாக நேற்று பாடலாசிரியர் விவேக் தெரிவித்த நிலையில் இன்று மீண்டும் தனுஷ் படத்தில் இணைந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் மூன்று விக்ரம் படங்கள்: சீயான் ரசிகர்கள் குஷி!

சியான் விக்ரம் நடித்த 'மஹான்' திரைப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில் இன்னும் மூன்று விக்ரம் படங்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிக்பாஸ் லவ் ஜோடியை 'நாய்க்காதல்' என்று விமர்சித்தாரா வனிதா?

 ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தும் நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் ஒரு காதல் ஜோடி உலாவி வரும் நிலையில் அவர்களை 'நாய்க்காதல்

அஜித்தின் 'வலிமை' வசூல் ரூ.200 கோடியை நெருங்கிவிட்டதா?

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்தின் ஒன்பது நாட்களின் வசூல் ரூபாய் 200 கோடியை நெருங்கி விட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.