ரசிக்க போறியா..? தவிர்க்க போறியா..?? ஐபிஎல் குறித்து ஜிவி பிரகாஷின் ஆவேச டுவீட்
- IndiaGlitz, [Tuesday,April 10 2018]
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். இது விளையாட்டு போட்டியா? அல்லது திகார் ஜெயிலா? என்ற கேள்வியே இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே பெரும்பாலானோர் இந்த போட்டியை பார்க்க போவதில்லை என்ற கருத்தை பதிவு செய்து வரும் நிலையில் நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இதுகுறித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஐபிஎல் வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் இவ்வளவு நிபந்தனைகள் தேவையா? செல்போன் எடுத்து கொண்டு போகக்கூடாது, ஒரு குறிப்பிட்ட டீசர்ட் போடக்கூடாது, பேனர்கள், எடுத்து செல்ல கூடாது போன்ற நிபந்தனைகள் எங்கள் உணர்வை வெளிப்படுத்த தடையாய் இருக்கும் நிபந்தனைகளாக உள்ளது.
இவ்வளவு நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு ஏன் நாங்கள் அந்த போட்டியை காண வேண்டும்? எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த பெரும் தடையை விதிக்கின்றார்கள். மைதானத்திற்குள் போன் உள்பட எதையும் எடுத்து கொண்டு போகக்கூடாது என்றால் அப்புறம் என்னதான் எடுத்து கொண்டு செல்வது? இத்தனை நிபந்தனைகளையும் ஒப்புக்கொண்டு அப்படி அந்த போட்டியை பார்க்க வேண்டுமா? என்ற கேள்விதான் எழுப்பப்படுகின்றது. இவ்வாறு ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.
மேலும் தனது சமூக வலைத்தளத்தில், 'அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? சுதந்திரமா உன் கருத்தை சொல்லமுடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..?? தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..?