ரசிக்க போறியா..? தவிர்க்க போறியா..?? ஐபிஎல் குறித்து ஜிவி பிரகாஷின் ஆவேச டுவீட்

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். இது விளையாட்டு போட்டியா? அல்லது திகார் ஜெயிலா? என்ற கேள்வியே இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே பெரும்பாலானோர் இந்த போட்டியை பார்க்க போவதில்லை என்ற கருத்தை பதிவு செய்து வரும் நிலையில் நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இதுகுறித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஐபிஎல் வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் இவ்வளவு நிபந்தனைகள் தேவையா? செல்போன் எடுத்து கொண்டு போகக்கூடாது, ஒரு குறிப்பிட்ட டீசர்ட் போடக்கூடாது, பேனர்கள், எடுத்து செல்ல கூடாது போன்ற நிபந்தனைகள் எங்கள் உணர்வை வெளிப்படுத்த தடையாய் இருக்கும் நிபந்தனைகளாக உள்ளது.

இவ்வளவு நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு ஏன் நாங்கள் அந்த போட்டியை காண வேண்டும்? எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த பெரும் தடையை விதிக்கின்றார்கள். மைதானத்திற்குள் போன் உள்பட எதையும் எடுத்து கொண்டு போகக்கூடாது என்றால் அப்புறம் என்னதான் எடுத்து கொண்டு செல்வது? இத்தனை நிபந்தனைகளையும் ஒப்புக்கொண்டு அப்படி அந்த போட்டியை பார்க்க வேண்டுமா? என்ற கேள்விதான் எழுப்பப்படுகின்றது. இவ்வாறு ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். 

மேலும் தனது சமூக வலைத்தளத்தில், 'அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? சுதந்திரமா உன் கருத்தை சொல்லமுடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..?? தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க  சொல்லப்போறியா..?

More News

இதுதான் என்னுடைய பிரம்மாஸ்திரம்: ஸ்ரீரெட்டி பேட்டியால் அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் தெலுங்கு திரையுலக பிரபலங்களின் பெயர்களை சமீபத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்தார்.

சேப்பாக்கம் மைதானத்திற்குள் நாளை என்னென்ன கொண்டு செல்ல கூடாது?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு பெரும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனை இழக்கின்றதா சிஎஸ்கே?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் இருவர் . குறிப்பாக கேதார் ஜாதவ் கடைசி ஓவரில் அடித்த ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியே வெற்றிக்கு வித்திட்டது

ரஜினிக்கு கார்த்திக் சுப்புராஜ் தேர்வு செய்த வில்லன் நடிகர்

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்

ரஜினியின் ஆலோசனைக்கு தடை போட்ட சேப்பாக்கம் மைதான நிர்வாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நாளை சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி குறித்து கருத்து தெரிவித்தபோது, தமிழகமே போராட்டக்களத்தில் இருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டியை ரத்து செய்வது நல்லது