நந்திதாவின் அடுத்த படத்தை புரமோஷன் செய்யும் ஜிவி பிரகாஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பா.ரஞ்சித் இயக்கிய 'அட்டக்கத்தி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா, அதன்பின்னர் எதிர்நீச்சல், 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'முண்டாசுப்பட்டி, புலி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நாயகிக்கு முக்கியத்தும் உள்ள ஒரு படத்தில் நந்திதா தற்போது நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ராம்குமார் சுப்புராமன் இயக்கி வருகிறார். பவர்கிங் ஸ்டுடியோ தயாரித்து வரும் இந்த படத்தின் படப்ப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நாளை காலை 10.25 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பிரபல இசையமைப்பாளர், நடிகர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு புரமோஷன் செய்கிறார்.
Excited!!
— Nanditaswetha (@Nanditasweta) March 5, 2019
Darling @gvprakash, will reveal the First look of My next Tamil-Telugu Bilingual by Tomorrow @ 10.25 AM.
Bankrolled by #PowerKingStudio S.Prabhakar and Directed by #RamkumarSubbaraman#NanditaSwethaNext@Nanditasweta @proyuvraaj
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments