விவசாயிகளுக்காக 'ஜோக்கர்' இயக்குனருடன் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ்

  • IndiaGlitz, [Thursday,July 06 2017]

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஒவ்வொரு சமூக பிரச்சனையின்போது அதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக ஒரு பாடல் கம்போஸ் செய்து அந்த பாடலை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வது வழக்கம்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு பிரச்சனையின்போது 'கொம்பு வச்ச சிங்கமடா' என்ற பாடலையும், சமீபத்தில் நடந்த நெடுவாசல் பிரச்சனையின்போது 'தியாகம் செய்வோம்' வா என்ற பாடலையும் கம்போஸ் செய்தார். இந்த பாடல்கள் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் வராததால் ஏற்பட்ட விவசாய பாதிப்புகளை மையமாக வைத்து 'கொளை விளையும் நிலம்' என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. க.ராஜீவ்காந்தி இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடலை கம்போஸ் செய்ய, 'ஜோக்கர்' இயக்குனர் ராஜூமுருகன் அதற்கு பாடலை எழுதியுள்ளார். 'அம்மண அம்மண தேசத்துல' என்று தொடங்கும் இந்த பாடலும் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் பாடல் போலவே பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ரஜினியின் செல்பி வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் என்பது தெரிந்ததே.

திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்!

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி, மாநில அரசின் கேளிக்கை ஆகிய இரட்டை வரி விதிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த திங்கள் முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன.

கேசினோவில் ரஜினி: அரசியல்வாதிகளின் பகல் கனவு பலிக்குமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்காவில் கேசினோ கிளப் ஒன்றில் இருப்பது போன்ற புகைப்படம் கடந்த சில மணி நேரங்களாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் வெளியிட்டு, கேசினோ கிளப்பில் விளையாடும் ரஜினிக்கு அமெரிக்க டாலர்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்து அமல&#

திரைத்துறைக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் குரல் கொடுத்த ஸ்டாலின்

கடந்த 1ஆம் தேதி முதல் 'ஒரே நாடு ஒரே வரி' என்ற முழகத்துடன் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது...

பாவனாவின் திருமணத்தை தடுக்க முயற்சித்த விஐபி யார்?

கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் கேரள திரையுலகையே கதிகலங்க செய்தது. இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் பல்சர் சுனி கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது...