2 வார இடைவெளியில் அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் செய்யும் ஜிவி பிரகாஷ்..!

  • IndiaGlitz, [Tuesday,March 12 2024]

ஜிவி பிரகாஷ் நடித்த ’ரிபெல்’ என்ற திரைப்படம் வரும் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு அடுத்த இரண்டு வாரத்தில் அவர் நடித்த இன்னொரு படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என பிஸியாக இருக்கும் ஜிவி பிரகாஷ் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவை அனைத்துமே ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்த ’ரிபெல்’ என்ற திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆன நிலையில் இந்த படம் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்த இன்னொரு திரைப்படமான ’கள்வன்’ திரைப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் ஜோடியாக ’லவ் டுடே’ இவானா நடித்துள்ள இந்த படத்தில் பாரதிராஜா உட்பட பலர் நடித்துள்ளனர். பிவி ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’தங்கலான்’ ’அமரன்’ ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ உள்பட சுமார் 10 படங்களுக்கு மேல் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.