ஜோதிகாவிடம் இருந்து விடை பெற்ற பிரபல நடிகர்
Saturday, July 22, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கி வரும் அடுத்த படம் 'நாச்சியார்'. இந்த படத்தில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஜோதிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாகவே விறுவிறுப்புடன் நடந்து வந்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் காட்சிகளின் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்., சற்று முன்னர் அவர் இதுகுறித்து குறிப்பிட்டுள்ள பதிவு ஒன்றில், 'நாச்சியார்' படத்தின் என்னுடைய போர்ஷன் முடிந்துவிட்டது. இந்த படத்தில் நடித்த அனுபவங்கள், நினைவுகள் என் மனதில் நீண்ட நாட்களுக்கு இருக்கும். பாலா மற்றும் ஜோதிகா ஆகியோர்களுக்கு எனது நன்றிகளை கூறி விடைபெறுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா, ராக்லைன் வெங்கடேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். பாலா தயாரித்து இயக்கி வரும் இந்த படத்திற்கு ஈஸ்வர் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்புக் செய்து வருகின்றனர். இந்த படம் வரும் செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
And that's a wrap for my portions in #Naachiyaar . This memory will stay down for a very long time . Thanks dear Bala sir and Jo mam ✨✨❤️ pic.twitter.com/XUOPXqpYxX
— G.V.Prakash Kumar (@gvprakash) July 22, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments