விஜய்-சூர்யா-சிம்புவுடன் இணைந்தார் ஜி.வி.பிரகாஷ்

  • IndiaGlitz, [Wednesday,March 23 2016]

வரும் மே மாதம் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வருவதால் ஏப்ரல் மாதமே பெருவாரியான திரைப்படங்களை ரிலீஸ் செய்ய கோலிவுட் திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். ஏப்ரலில் விஜய்யின் 'தெறி', சூர்யாவின் '24', சிம்புவின் 'இது நம்ம ஆளு' உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'பென்சில்' திரைப்படமும் ஏப்ரலில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது


ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்', 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' ஆகிய இரண்டு படங்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆகிவிட்டாலும் 'பென்சில்' திரைப்படம்தான் முதன்முதலாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்புக்கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா, விடிவி கணேஷ், ஊர்வசி, டி.பி.கஜேந்திரன் உள்பட பலர் நடித்த 'பென்சில்' படத்தை மணிநாகராஜ் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி இந்த படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.