விரைவில் ரிலீஸ் ஆகிறது ஜி.வி.பிரகாஷின் முதல்படம்

  • IndiaGlitz, [Friday,January 22 2016]

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிகராக அறிமுகமான படம் 'பென்சில்'. ஆனால் இந்த படத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட 'டார்லிங்' மற்றும் த்ரிஷா இல்லைனா நயன்தாரா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியை பெற்றன. அதுமட்டுமின்றி தற்போது ஜி.வி.பிரகாஷ் 'புரூஸ்லீ மற்றும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' ஆகிய பெரிய பேனர்களின் படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட் தற்போது உயர்ந்துள்ளதை அடுத்து ஒருசில சிக்கலில் இருந்த 'பென்சில்' திரைப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. பிவிஎஸ் சினிமாஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது.

மணிநாகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா, விடிவி கணேஷ், ஊர்வசி, டி.பி.கஜேந்திரன், மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திர்கு அந்தோணி படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.