ஜிவி பிரகாஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,December 28 2021]

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்த ’பேச்சிலர்’ மற்றும் ’ஜெயில்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவரது நடிப்பில் உருவான மற்றொரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ரவி அரசு இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘ஐங்கரன்’. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார் என்பதும் மேலும் காளி வெங்கட் ,ஆடுகளம் நரேன், அருள்தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து சில ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது ஜனவரி 26ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்டகாலமாக கிடப்பில் இருந்த ஜிவி பிரகாஷின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.