'புரூஸ் லீ'யை அடுத்து ஜி.வி.பிரகாஷின் அடுத்த பட டைட்டில்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த 'டார்லிங்' என்ற ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகி வெற்றி பெற்றது. இன்னும் இரண்டாவது படம் கூட வெளியாகாத நிலையில் அவருக்கு தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருகின்றது.
ஏற்கனவே பென்சில் மற்றும் த்ரிஷா இல்லனா நயன்தாரா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ஜி.வி.பிரகாஷ், சமீபத்தில் 'பசங்க' பாண்டிராஜ் அவர்களின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் 'புரூஸ் லீ' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இம்முறை ஜி.வி.பிரகாஷ் மீண்டும் 'டார்லிங்' டீமுடன் கூட்டணி சேரவுள்ளார். டார்லிங் இயக்குனர் சான் ஆண்டன் இயக்கும் அடுத்த படத்திலும் ஜி.வி.பிரகாஷ்தான் ஹீரோ. இந்த படத்திற்கு 'கைப்புள்ள' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வைகைப்புயல் வடிவேலுவின் ஃபேமஸ் கேரக்டரையே டைட்டிலாக வைத்ததில் இருந்தே இந்த படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பதை அறிய முடிகிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா, புரூஸ்லீ, கைப்புள்ளே என வித்தியாசமான டைட்டில்களை தேர்வு செய்துள்ள ஜி.வி.பிரகாஷ், வித்தியாசமான படத்தையும், நடிப்பையும் தருவார் என எதிர்பார்க்கின்றோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com