ஜிவி பிரகாஷின் அடுத்த படம்.. தனுஷ் வெளியிட்ட சூப்பர் வீடியோ!

  • IndiaGlitz, [Friday,January 06 2023]

தமிழ் திரை உலகின் இசையமைப்பாளர் மற்றும் ஹீரோ என இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்துவரும் ஜிவி பிரகாஷ் தற்போது சில படங்களில் நடித்தும் சில படங்களில் இசையமைத்தும் வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் தனுஷ் வெளியிட்டு உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் மற்றும் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘கள்வன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் நடக்கும் த்ரில் சம்பவங்களுடன் கூடிய கதையம்சம் கொண்ட இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சற்று முன் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.