ஜிவி பிரகாஷின் அடுத்த படம் அறிவிப்பு.. நாயகி இந்த பிரபல நடிகையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தற்போது அரை டஜனுக்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் அவர் தற்போது இசையமைப்பாளராகவும் பிஸியாக இருக்கிறார் என்பதும் தெரிந்ததே.
குறிப்பாக ’ருத்ரன்’ ’வாத்தி’ ’மார்க் ஆண்டனி’ ’தங்கலான்’ உள்பட பல முக்கிய படங்களுக்கு இசையமைத்து வரும் ஜீவி பிரகாஷ் ஹீரோவாகவும் திரை உலகில் ஜொலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜீவி பிரகாஷ் ஹீரோவாக நடித்து இசையமைக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ’செத்தும் ஆயிரம் பொன்’ என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அவரே தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த படத்தில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Glad to announce that my next project will be @NutmegProd's Production No.3 with @aishu_dil! To be directed by @Anand_RChandran #NutMegProductionNo3 @tvaroon @narentnb #Abhishekramisetty #PruthvirajGK @jagadeesh_s_v @editorKripa @anushaa1394 @TherukuralArivu @proyuvraaj pic.twitter.com/rQ7JOFlqdx
— G.V.Prakash Kumar (@gvprakash) December 11, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments