ஜிவி பிரகாஷின் அடுத்த படம் அறிவிப்பு.. நாயகி இந்த பிரபல நடிகையா?

  • IndiaGlitz, [Sunday,December 11 2022]

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தற்போது அரை டஜனுக்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் அவர் தற்போது இசையமைப்பாளராகவும் பிஸியாக இருக்கிறார் என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக ’ருத்ரன்’ ’வாத்தி’ ’மார்க் ஆண்டனி’ ’தங்கலான்’ உள்பட பல முக்கிய படங்களுக்கு இசையமைத்து வரும் ஜீவி பிரகாஷ் ஹீரோவாகவும் திரை உலகில் ஜொலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜீவி பிரகாஷ் ஹீரோவாக நடித்து இசையமைக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ’செத்தும் ஆயிரம் பொன்’ என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அவரே தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

More News

என்றாவது ஒரு நாள் அந்த படம் ரிலீஸ் ஆகும்: நயன்தாராவின் 'கனெக்ட்' இயக்குனர்!

நயன்தாரா நடித்த 'கனெக்ட்' என்ற திரைப்படத்தை இயக்கி உள்ள அஸ்வின் சரவணன் இந்த படத்தை வரும் 22ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளார் என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை

ஆர்யா-சாயிஷா தம்பதியின் க்யூட்டான குழந்தை.. அழகிய புகைப்படம் வைரல்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஆர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ஆர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள அவருடைய மனைவி சாயிஷா,

நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதியா? என்ன ஆச்சு?

நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திக்கு சரத்குமார் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர தம்பதிகளின் கார் மீது மோதிய சரக்கு வாகனம்.. கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு!

 தெலுங்கு திரையுலகின் நட்சத்திர தம்பதிகள் மீது சரக்கு வாகனம் ஒன்று மோதிய நிலையில் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதல்முறையாக பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கிய கமல்ஹாசன்: நெகிழ்ச்சியான வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த ஆறு சீசன்களில் முதல் முறையாக கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் கண்கலங்கிய வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.