close
Choose your channels

'தனுஷ் 43' படம் குறித்த அட்டகாசமான தகவல் தந்த ஜிவி பிரகாஷ்!

Tuesday, December 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’கர்ணன்’ திரைப்படமும் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ படமும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படங்களின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ’அத்ராங்கே’ என்ற பாலிவுட் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பதும் தனுஷின் 43 ஆவது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது என்பதும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்றும் ஏற்கனவே செய்தி வெளிவந்ததை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது தனுஷின் 43வது படத்திற்கு மூன்று பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் நான்காவது பாடலையும் கம்போஸ் செய்யும் பணியில் தற்போது இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஜிவி பிரகாஷின் அட்டகாசமான இந்த தகவல் காரணமாக தனுஷ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். மேலும் இந்த படத்தின் பாடல்கள் விரைவில் ஆல்பமாக வெளியாகும் என்றும் அந்த தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருங்கள் என்றும் ஜீவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ’தனுஷ் 43’ படப்பிடிப்பு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment