விஜய்க்கு 'தமிழாலே ஒன்றானோம்', ஜி.வி.பிரகாஷுக்கு 'தமிழானோம்'
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் 'தமிழாலே ஒன்றானோம்' என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்போம். ஆனால் தமிழுக்காக 'தமிழானோம்' என்று தொடங்கும் பாடலை ஜி.வி.பிரகாஷ் இயற்றி வருகிறார். இந்த பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.
ஒவ்வொரு சமூக பிரச்சனைகளுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஒரு தனிப்பாடல் வெளியிட்டு வருவது தெரிந்ததே. ஜல்லிக்கட்டுக்கு ஒரு 'இது கொம்பு வச்ச சிங்கமடா' என்ற பாடல், நெடுவாசலுக்காக ஒரு 'தியாகம்செய்வோம்வா' பாடல் ஆகியவற்றை இசையமைத்து வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் தற்போது ஹார்வர்ட் பல்கலையில் தமிழுக்கு இருக்கை பெற வேண்டி 'தமிழானோம்' என்று தொடங்கும் பாடலை இயற்றி வருகிறார்
இந்த பாடலின் பணி நடந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் இந்த பாடல் வெளியாகும் என்றும் ஜி.வி.பிரகாஷ் சற்றுமுன்னர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். தமிழை வைத்து வியாபாரம் செய்து வரும் அரசியல் கட்சிகளின் மத்தியில் தமிழுக்காக உண்மையாக குரல் கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ் போன்றவர்களை ஆதரிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments