முதல்முறையாக ஜி.வி.பிரகாஷுடன் இணையும் சாந்தனு பாக்யராஜ்
- IndiaGlitz, [Friday,March 11 2016]
இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று கே.பாக்யராஜ் போற்றப்பட்டபோதிலும் அவருடைய மகன் சாந்தனு பாக்யராஜூக்கு இதுவரை சொல்லிக்கொள்ளும்படியான திரைப்படங்கள் வெளிவரவில்லை. கடந்த 2012ஆம் ஆண்டு தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளிவந்த 'அம்மாவின் கைபேசி' படத்திற்கு பின்னர் நான்கு வருடங்களாக அவர் நடித்த படம் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாய்மை, அமளிதுமளி ஆகிய இரு படங்களில் சாந்தனு நடித்து வந்தாலும் அந்த படங்களின் தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் தற்போது சாந்தனு 'முப்பரிமாணம்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தில் சாந்தனுக்கு ஜோடியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கவுள்ளதாகவும் இந்த படம் சாந்தனுவின் முதல் கமர்ஷியல் வெற்றிப்படமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிரூபன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.