ஜி.வி.பிரகாஷின் அடுத்த பட டைட்டில் இதுவா?

  • IndiaGlitz, [Wednesday,August 17 2016]

ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் அப்பாவியான ஜி.வி.பிரகாஷ் மீது ஒரு பெரிய குற்றப்பழி விழுவதாகவும், அதிலிருந்து அவர் மீண்டு நிரபராதி என்று தன்னை எப்படி நிரூபிக்கின்றார் என்பதுதான் கதை என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு 'அடங்காதே' என்ற டைட்டில் வைக்க படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷுடன் சரத்குமார், வைபவி சந்தில்யா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

More News

ஆயுதபூஜை ரேசில் இணைந்த விஜய்சேதுபதி படம்

வரும் ஆயுதபூஜை விடுமுறை தினமான அக்டோபர் 7ஆம் தேதி சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ'...

தனுஷின் கண்களில் கண்ணீரை வரவழைத்த திரைப்படம்

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருவது மட்டுமின்றி...

ஸ்ருதிஹாசன் - கெளதமி இடையே என்னதான் நடக்கின்றது. ஒரு நீண்ட விளக்கம்

உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்திலும் கெளதமி...

நேதாஜி வாழ்க்கையை ஜனரஞ்சமாக படமாக்க விரும்பும் பிரபல இயக்குனர்

பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், கமல், ரஜினி படங்கள் உள்பட பல கமர்ஷியல் படங்களை எடுத்துள்ள நிலையில் இந்திய விடுதலைக்கு வித்திட்ட சுதந்திர போராட்டி வீரர் நேதாஜி

கார்த்தியின் 'காஷ்மோரா' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'காஷ்மோரா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...