நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஜிவி பிரகாஷ் படம்.. நாயகி, இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,November 07 2022]

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் பல திரைப்படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அதேபோல் சில முக்கிய நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து கொண்டிருக்கிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. கவிதாலயாநிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் பூஜையில் ஜிவி பிரகாஷ் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தை உதய் மகேஷ் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’நாளை’ ’சக்கர வியூகம்’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் நாயகியாக மலையாள நடிகை அனஸ்வர ராஜன் என்பவர் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் த்ரிஷா நடித்த ‘ராங்கி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிக்பாஸ் டேனியல் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு அப்துல் வகாப் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்ப இருப்பதாக பூஜை தினத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.