பாலிவுட் நடிகரை திருமணம் செய்து கொண்ட ஜிவி பிரகாஷ் பட நாயகி.. கணவர் குறித்த நெகிழ்ச்சியான பதிவு..!

  • IndiaGlitz, [Saturday,March 16 2024]

ஜிவி பிரகாஷ் படத்தில் நாயகியாக நடித்த நடிகை, பாலிவுட் நடிகரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கணவர் குறித்து நாங்கள் நெகிழ்ச்சியாக கவிதை வடிவில் பதிவு செய்திருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் நடித்த ’புரூஸ்லி’ என்ற திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிகை கீர்த்தி கர்பந்தா நடித்திருந்தார். இவர் தமிழில் ஒரே படத்தில் நடித்து இருந்தாலும் தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது கூட அவர் ஹிந்தியில் ஒரு படம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை கீர்த்தி கர்பந்தா பாலிவுட் நடிகர் புல்கிட் சாம்ராட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாக தெரிகிறது

இந்த நிலையில் தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கீர்த்தி கர்பந்தா 'ஆழமான நீல வானத்திலிருந்து காலை பனி படரும் நேரத்தில் உங்களை கரம் பிடித்தேன். இனி தொடக்கம் முதல் இறுதிவரை எப்போதும் என் இதயம் உங்களுக்காக துடிக்கும். என் இதயத்தில் துடிக்கும் பெயர் நீங்களாவே தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து இருப்பீர்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

இயேசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தா? விஜய் ஆண்டனி விளக்கம்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இயேசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கண்டனம் தெரிவித்த

இந்த ஆண்டு சூர்யா ரசிகர்களுக்கு டபுள் விருந்தா? பிரபலம் கூறிய மாஸ் தகவல்..!

சமீபத்தில் ஜிவி பிரகாஷ் அளித்த பேட்டியில் சூர்யாவின் 43 வது படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று கூறியுள்ளதை அடுத்து 'கங்குவா' மற்றும் 'சூர்யா 43' ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாக

'கோட்' திரைப்படத்தில் த்ரிஷாவின் டான்ஸ்.. இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்ட செம்ம புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் த்ரிஷா சிறப்பு தோற்றமாக ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பதாக தகவல் வெளியானது

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிப்பு.. 'தங்கலான்' படத்தின் ரிலீஸ் தேதி என்ன?

ஒரு சில தமிழ் திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தும் தேர்தல் தேதி அறிவிப்புக்காக காத்திருந்ததாகவும் தற்போது தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து

ஒரு நல்ல காரியத்திற்காக இணைந்த மதன்கெளரி - புகழ்.. வீடியோ வைரல்..!

'குக் வித் கோமாளி உள்பட சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தற்போது சினிமாவிலும் நடித்து வரும் புகழ் மற்றும் பிரபல யூடியூபர் மதன் கௌரி ஆகிய இருவரும் ஒரு நல்ல காரியத்திற்காக இணைந்து வெளியிட்ட வீடியோ தற்போது